Home » » புதுச்சேரி: தனித் தேர்வர்களுக்கு இணையதளம் மூலம் தேர்வுக்கூட நுழைவுச் சீட்

புதுச்சேரி: தனித் தேர்வர்களுக்கு இணையதளம் மூலம் தேர்வுக்கூட நுழைவுச் சீட்

மேல்நிலை மற்றும் இடைநிலைக் கல்வித் துணைத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு முதன்முறையாக இணையதளம் மூலம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வழங்கப்படவுள்ளது என பள்ளிக் கல்வி இயக்குநர் இ.வல்லவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: வரும் 23-ஆம் தேதி அன்று தொடங்கவுள்ள மேல்நிலை (12-ம் வகுப்பு), இடைநிலைக்கல்வி (10-ஆம் வகுப்பு) துணைத் தேர்வை எழுதவுள்ள தனித்தேர்வர்கள் தங்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை தேர்வு தொடங்கும் நாள் வரை www.tndge.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த இணையதளத்தில் HIGHER SECONDARY/SSLC SUPPLEMENTARY EXAMINATION, SEPTEMBER/OCTOBER 2013 HALL TICKET PRINT OUT என்ற வாசகத்தை கிளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவுசெய்தால் அவர்களுடைய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுக் கூட அனுமதிச் சீட்டில் புகைப்படம் முற்றிலும் பதிவாகாத/மிகவும் சிறியதாகப் பதிவாகியுள்ள தனித்தேர்வர்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பத்தையும் எடுத்துக் கொண்டு உடனே இணை இயக்குநர்/முதன்மைக் கல்வி அலுவலர், புதுச்சேரி அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை தேர்வு அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில 40 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வை மீண்டும் செய்வதோடு எழுத்துத் தேர்வுக்கும் வர வேண்டும். அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறைத் தேர்வுக்கு மீண்டும் வர வேண்டும். முதன்முறையாக மேல்நிலைத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள நேரடித் தனித் தேர்வர்கள் (HP வகை) பகுதி 1 மற்றும் பகுதி 2 மொழிப்பாடத்தின் தாள் இரண்டு மற்றும் பகுதி 3-ல் சிறப்பு மொழி (தமிழ்) எழுதும் தேர்வர்கள் கேட்டல்/பேசுதல் திறன் தேர்வுகளைக் கண்டிப்பாக செய்ய வேண்டும். மொழிப்பாடங்களில் கேட்டல்/பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழிப் (தமிழ்) பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான தேதியை தேர்வர்கள் சம்பந்தப்பட்ட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரை (செவாலியே செல்லான் அரசு மேல்நிலைப் பள்ளி, காலாப்பட்டு, விவேகானந்தா அரசு மேல்நிலைப் பள்ளி, வில்லியனூர்) அணுகி அறியலாம். உரிய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு இன்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் (தக்கல்) ஆன்லைனில் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் 21.9.12, 22.9.13 தேதிகளில் தேர்வுக் கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம். தேர்வுக் கூட அனுமதிச்சீட்டு அஞ்சல் மூலம் அனுப்பப்படாது என்றார் வல்லவன்.
Jika Anda menyukai Artikel di blog ini, Silahkan klik disini untuk berlangganan gratis via email, dengan begitu Anda akan mendapat kiriman artikel setiap ada artikel yang terbit di Creating Website

No comments:

Post a Comment

 

Copyright © 2011. Tamilnadu Results - All Rights Reserved

Proudly powered by Blogger