குரூப்-1 முதன்மை தேர்வு அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைப்பு

குரூப் 1 முதன்மைத் தேர்வு அடுத்த மாதம் நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப் 1 பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு வரும் 27-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தினங்களில் பிற போட்டித் தேர்வுகள் நடைபெறுவதால், குரூப் 1 முதன்மைத் தேர்வு அடுத்த மாதம் (அக்டோபர்) 25-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறும். மேலும், இந்து சமய அறநிலையத் துறையின் செயல் அலுவலர் நிலை-4க்கான தேர்வு அடுத்த மாதம் (அக்டோபர்) 26 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்வு நவம்பர் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

புதுச்சேரி: தனித் தேர்வர்களுக்கு இணையதளம் மூலம் தேர்வுக்கூட நுழைவுச் சீட்

மேல்நிலை மற்றும் இடைநிலைக் கல்வித் துணைத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு முதன்முறையாக இணையதளம் மூலம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வழங்கப்படவுள்ளது என பள்ளிக் கல்வி இயக்குநர் இ.வல்லவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: வரும் 23-ஆம் தேதி அன்று தொடங்கவுள்ள மேல்நிலை (12-ம் வகுப்பு), இடைநிலைக்கல்வி (10-ஆம் வகுப்பு) துணைத் தேர்வை எழுதவுள்ள தனித்தேர்வர்கள் தங்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை தேர்வு தொடங்கும் நாள் வரை www.tndge.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த இணையதளத்தில் HIGHER SECONDARY/SSLC SUPPLEMENTARY EXAMINATION, SEPTEMBER/OCTOBER 2013 HALL TICKET PRINT OUT என்ற வாசகத்தை கிளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவுசெய்தால் அவர்களுடைய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுக் கூட அனுமதிச் சீட்டில் புகைப்படம் முற்றிலும் பதிவாகாத/மிகவும் சிறியதாகப் பதிவாகியுள்ள தனித்தேர்வர்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பத்தையும் எடுத்துக் கொண்டு உடனே இணை இயக்குநர்/முதன்மைக் கல்வி அலுவலர், புதுச்சேரி அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை தேர்வு அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில 40 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வை மீண்டும் செய்வதோடு எழுத்துத் தேர்வுக்கும் வர வேண்டும். அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறைத் தேர்வுக்கு மீண்டும் வர வேண்டும். முதன்முறையாக மேல்நிலைத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள நேரடித் தனித் தேர்வர்கள் (HP வகை) பகுதி 1 மற்றும் பகுதி 2 மொழிப்பாடத்தின் தாள் இரண்டு மற்றும் பகுதி 3-ல் சிறப்பு மொழி (தமிழ்) எழுதும் தேர்வர்கள் கேட்டல்/பேசுதல் திறன் தேர்வுகளைக் கண்டிப்பாக செய்ய வேண்டும். மொழிப்பாடங்களில் கேட்டல்/பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழிப் (தமிழ்) பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான தேதியை தேர்வர்கள் சம்பந்தப்பட்ட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரை (செவாலியே செல்லான் அரசு மேல்நிலைப் பள்ளி, காலாப்பட்டு, விவேகானந்தா அரசு மேல்நிலைப் பள்ளி, வில்லியனூர்) அணுகி அறியலாம். உரிய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு இன்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் (தக்கல்) ஆன்லைனில் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் 21.9.12, 22.9.13 தேதிகளில் தேர்வுக் கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம். தேர்வுக் கூட அனுமதிச்சீட்டு அஞ்சல் மூலம் அனுப்பப்படாது என்றார் வல்லவன்.

முதுகலை கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பம்

புதுச்சேரியில் உள்ள ராஜீவ் காந்தி கால்நடை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், முதுகலை மருத்துவப் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எம்.வி.எஸ்சி., படிப்புக்கு இளங்கலை கால்நடை மருத்துவப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடம் தளர்வு அளிக்கப்படும். விண்ணப்ப படிவங்களை www.ragacovas.com என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ரூ.500க்கான வரைவோலையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.200க்கான வரைவோலையும் எடுத்து இணைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்.,7ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அக்.,11ம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெறுகின்றது. கூடுதல் தகவல்களுக்கு www.ragacovas.com என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

ரெப்கோ (Repco) வீட்டுவசதி நிறுவன வாய்ப்புகள்

பரவலாக அறியப்படும் ரெப்கோ வங்கியின் துணை நிறுவனமான ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள கிராஜூவேட் டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இந்த காலியிடங்கள் உள்ளன.

தகுதி: பி.காம்., அல்லது பட்டப்படிப்பு ஒன்றில்தேர்ச்சி
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு முறை மூலமாக மட்டும்
தேவை: முன்னனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.
வயது: 1.6.2013 அன்று 25க்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை: உங்களைப் பற்றிய முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டாவை தபாலில் அனுப்பலாம். இமெயில் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
 --------------------------
விண்ணப்பிக்கும் முகவரி
 Repco Home Finance Limited,
 No 40/354/ 1A,
Second Floor, Raymonds Apple Showroom,
Opp Malabar Gold & Diamonds,
 Park Road,
Kurnool. 518001.
 இமெயில் முகவரி: knl@repcohome.com
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: செப்டம்பர் 16, 2013

இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் 1578 காலியிடங்கள்

மத்திய அரசு வேலை வேண்டும் என்று ஏங்கிடும் இளைஞர்கள் எண்ணற்றோர் உண்டு. ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து மத்திய அரசு நிறுவனமான இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் காலியாகவுள்ள 1578 காலியிடங்களுக்கு போட்டியிட விரும்புவோருக்கான வாய்ப்பை இந்த தொழிற்சாலை அறிவித்துள்ளது. 

இது குறித்த தகவல்கள் இதோ....

துறை வாரியாக காலியிடங்கள்:


மெக்கானிக்கல் 876
ஐ.டி., 23
எலக்ட்ரிகல் 133
கெமிக்கல் 296
சிவில் 39
மெடலர்ஜி 46
கிளாதிங் டெக்னாலஜி 32
லெதர் டெக்னாலஜி 4
ஸ்டோர்ஸ் 47
ஓ.டி.எஸ் 59
ஆட்டோமொபைல் 3
எலக்ட்ரானிக்ஸ் 20
மொத்தம் 1578

வயது தகுதி : 27 வரை
சம்பளம் : பணிக்கேற்ப ரூ.9300லிருந்து ரூ.34800 வரை
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
----------------------------------------------
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலமாக மட்டுமே
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: செப்டம்பர் 21

இதன் பிரிண்ட் அவுட் அனுப்பிட கடைசி நாள்: செப்டம்பர் 28
முழு விபரங்களறிய உதவும் இணைய தள தொடர்பு முகவரி

http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10201_853_1314b.pdf

அரசுத் துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் கிளரிகல் நேர்முகத் தேர்வு

செப்டம்பர் 09,2013

பொதுத் துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் கிளரிகல் எனப்படும் அசிஸ்டன்ட் பணியிடங்களுக்கான தேர்வு அகில இந்திய அளவில் ஜூலை 14 மற்றும் 21ம் தேதிகளில் இந்தியா முழுவதும் நடைபெற்றது. பல ஆண்டுகளுக்குப் பின் நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் பல லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
பொதுவாக வங்கித் தேர்வுகளை விட கடினமானதாக உணரப்பட்ட இந்தத் தேர்வின் முடிவுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. 1க்கு 4 என்ற விகிதத்தில் காலியிடங்களுக்கேற்ப நேர்முகத் தேர்வுக்கு போட்டியாளர்கள் அழைக்கப்படவுள்ளனர். மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தேர்வின் முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதற்கு எப்படித் தயாராவது என்ற பரபரப்பு போட்டியாளர்களிடம் காணப்படுகிறது. 
எந்த மாதிரியும் இல்லாத புது மாதிரி என்பது போன்ற விளம்பரம் போல அல்லாது பொதுவாக நேர்முகத் தேர்வுகள் இந்தத் துறையில் கடந்த காலத்தில் எப்படி நடத்தப்பட்டுள்ளன? 15 ஆண்டுகளுக்கும் முன்பாகத் தான் போட்டித் தேர்வு என்ற ஒன்றே இத் துறையில் நடத்தப்பட்டுள்ளது.
இந்திய நிதித் துறை பெரிய அளவில் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்திய போதும், ஆயுள் காப்பீட்டுத் துறையிலுள்ள எல்.ஐ.சி., கூட சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்திய போதும், பொதுக்காப்பீட்டுத் துறையிலுள்ள 4 அரசு நிறுவனங்களும் பெரிய சீர்திருத்தங்களை செயல்படுத்தவில்லை.
இந்த நிறுவனங்களில் பணியாற்றுவோரில் பெரும்பாலானோர் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் பணி நிறைவு செய்யவுள்ளனர் என்பதே வியப்பான உண்மை. எனவே தற்போதைய பணிச் சேர்க்கை என்பது இந்த நிறுவனங்களை அடுத்த 20 ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்லவிருக்கும் இளைஞர்களை தேர்வு செய்வதாக அமையும் என எதிர்பார்க்கலாம். இனி நேர்முகத் தேர்வுக்கு தயாராவது குறித்த சில தகவல்கள்....
இன்சூரன்ஸ்: நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் மற்றும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் ஆகிய 4 பொதுத் துறை நிறுவனங்களைப் பற்றிய தகவல்களை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.
இவற்றின் தலைமையிடங்கள், தலைவர்களின் பெயர்கள், இவை எந்த அமைச்சரவையின் கீழ் இயங்குகின்றன, சமீபத்திய செயல்பாடுகள், எத்தனை கிளைகள், நிர்வாக வடிவமைப்பு போன்ற தகவல்களை சேகரித்துக் கொள்ள வேண்டும். இவை ஐ.ஆர்.டி.ஏ., எனப்படும் இன்சூரன்ஸ் ஒழுங்குபடுத்தும் ஆணையம் பற்றிய தகவல்கள், இத் துறையில் செயல்படும் தனியார் துறை நிறுவனங்கள், அவற்றின் செயல்பாடுகள் போன்றவற்றை அறிவதும் முக்கியம். 
இன்சூரன்ஸ் என்றால் என்ன, அவற்றின் வகைகள் என்ன, பொது இன்சூரன்ஸ் மற்றும் ஆயுள்
இன்சூரன்ஸ் இவற்றுக்கிடையேயான வேறுபாடு, பிரிமீயம் என்றால் என்ன, இன்சூரன்ஸ் தொகை என்றால் என்ன போன்ற இன்சூரன்ஸ் அடிப்படைகளை அறிவதும் முக்கியம். 
பொது அறிவு மற்றும் நடப்புச் செய்திகள்: எந்த ஒரு நேர்முகத் தேர்வைப் போலவே இத் துறையிலும் இப்பிரிவு வினாக்கள் அதிகம் கேட்கப்படுகின்றன. விவாதத்தை உள்ளடக்கியதாக இல்லாமல் நேரடி கேள்வி பதில்களாகவே இவை கடந்த காலத்தில் கேட்கப்பட்டுள்ளன.
உதாரணமாக உணவுப் பாதுகாப்பு சட்டம் தேவையா இல்லையா என்பதாக இல்லாமல் எப்போது இயற்றப்பட்டது, எந்தக் கட்சிகள் ஆதரித்தன, எவை எதிர்த்தன, இதன் பலன்கள் என்ன, மொத்த நிதி ஒதுக்கீடு என்ன என்பதாக நடப்புச் செய்திகளிலிருந்து கேள்விகள் எழலாம். எத்தனை மாநிலங்கள், எத்தனை மாவட்டங்கள், எத்தனை மாநகராட்சிகள், பிற முக்கிய நடப்புகள் போன்றவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படலாம். செய்தித்தாள்களைப் படிப்பது, பொது அறிவுப் புத்தகங்களிலிருந்து இதற்குத் தயாராவது போன்றவை முக்கியம். 
படிப்பிலிருந்து கேள்விகள்: உங்களது தகுதிக்கேற்ப அந்த பாடத்திலிருந்து கேள்விகள் அமையும். உதாரணமாக எம்.எஸ்சி., படித்துள்ள ஒருவரிடமிருந்து அவரது பாடமாக இயற்பியல் இருந்தால் அதிலிருந்து கேள்விகள் அமையலாம். பெரிய ஆழ்ந்த கேள்விகளாக இவை இல்லாமல் நமது அடிப்படை பாட அறிவை சோதிப்பதாக இவை அமையும்.
வணிகவியலில் பட்ட மேற்படிப்பு முடித்திருக்கும் ஒருவரிடம் பாலன்ஸ் சீட் ஒன்றை காட்டி அதிலிருந்து அந்த நிறுவனத்தின் செயல்பாடு எப்படி எனக் கூற முடியுமா என்று கேட்கப்படலாம். பாலன்ஸ் சீட் என்பதில் சிறப்பான புரிதல் இருக்கும் ஒருவரால் மட்டுமே இதற்கு விடையளிக்க முடியும். இன்று பலரும் இன்ஜினியரிங் முடித்தவராக இருப்பதால், அந்த பாடங்களிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படலாம். 
இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர் தான் இந்த நேர்முகத் தேர்வு குழுவில் இடம் பெற வேண்டும் என்பதில்லை. கல்லூரி ஆசிரியர்களையும் துறை சார்ந்த நிபுணர்களையும் நேர்முகத் தேர்விற்காக சிறப்புப் பணியில் இந்த நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் அதிகம். 
தனிப்பட்ட கேள்விகள்: உங்களுக்கான சிறப்புப் பகுதி இதுதான். இன்ஜினியரிங் முடித்துவிட்டு இன்சூரன்ஸ் கம்பெனிக்கு எதற்கு வரவேண்டும்? உங்கள் பலம் என்ன, பலவீனம் என்ன, பொழுது போக்கு என்ன, உங்களது லட்சியம் என்ன, எதற்காக இந்த வேலையை உங்களுக்குத் தரவேண்டும், இது கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள், வேறு நல்ல வேலை கிடைத்தால் இதை விட்டுவிட மாட்டீர்களா போன்ற கேள்விகள் தான் உங்களைப் பற்றிய உண்மையான மதிப்பீட்டை குழுவுக்குத் தர முடியும். எனவே இதற்கு சிறப்பாக பதில் எழுதி பழகிக் கொள்ளுங்கள். பின் நேர்முகத் தேர்வில் பதிலளிக்க இது மிகவும் உதவும். இந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நேர்முகத் தேர்வுக்காக சிறப்பாகத் தயாராகுங்கள்.

Delhi Metro Rail corporation (DMRC) Civil Engineers Jobs Feb 2012

Jobs Details Of Civil Engineers in Delhi Metro Rail Corporation Ltd. (DMRC) For Kochi Metro rail Feb 2012

1. Assistant Engineer - 10 Posts


Salary - 20600-46500/-

Age - 40 Years

2. Junior Engineers(Civil) - 30 Posts

Salary - 13500-25520/-

Age - 28 Years

How To Apply
- all eligible candidates meeting eligibility criteria may apply by speed post along with their
particulars in the follow format by 2 March 2012 Postively.

Address - Executive Director (HR), Delhi Metro Rail Corporation Ltd, Metro Bhawan, Fire Brigade Lane, Barakhamba Road, New Delhi


Just Follow this link for get full details about this recruitment - http://delhimetrorail.com/CareerDocuments/2012/2/124Microsoft_Word_-_JE-Kochi.pdf


Official Website Of Delhi Metro Rail - www.delhimetrorail.com
 

Copyright © 2011. Tamilnadu Results - All Rights Reserved

Proudly powered by Blogger