Home » » யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ள இன்ஜினியரிங் சர்வீசஸ் தேர்வு

யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ள இன்ஜினியரிங் சர்வீசஸ் தேர்வு

மத்திய அரசுப் பணி இடங்களை நிரப்புவதற்காக யு.பி.எஸ்.சி., எனப்படும் யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் அனைவராலும் அறியப்படுகிறது. இந்த அமைப்பு தற்போது அரசுத் துறை சார்ந்த இன்ஜினியரிங் பணி இடங்களை நிரப்புவதற்கான 2012ஆம் ஆண்டிற்கான இன்ஜினியரிங் சர்வீசஸ் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேவைகள் : சிவில் இன்ஜினியரிங், மெக்கானிகல் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் ஆகிய இன்ஜினியரிங் புலங்களைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு பொருந்தும்.
இந்தத் தேர்வை எழுத விரும்புபவர்கள் மேற்கண்ட புலங்கள் ஏதாவது ஒன்றில் இன்ஜினியரிங் பட்டப் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். இதர அங்கீகரிக்கப்பட்ட இன்ஜினியரிங் பிரிவுகளிலான கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றவர்களும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்க முடியும்.
தற்போது உள்ள நிலையில் மொத்தம் 560 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் தேர்வை எதிர்கொள்ள விரும்புபவர்கள் 01.01.2012 அன்று 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க
வேண்டும்.
இதர தகவல்கள்: யு.பி.எஸ்.சி.,யின் இன்ஜினியரிங் சர்வீசஸ் தேர்வை எழுத ரூ.100/-ஐக் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை நெட் பேங்கிங் வசதி கொண்ட ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கிக் கிளையில் ரொக்கமாக செலுத்த வேண்டும். கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வழியாகவும் கட்டணத்தை செலுத்தலாம். முழுமையான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
கட்டணத்தை செலுத்திய பின் ஆன்-லைன் முறையில் சென்று விண்ணப்பங்களைச் செலுத்த வேண்டும். ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 09.04.2012
இணையதள முகவரி : http://upsc.gov.in/exams/notifications/2012/ese/eng.pdf
Jika Anda menyukai Artikel di blog ini, Silahkan klik disini untuk berlangganan gratis via email, dengan begitu Anda akan mendapat kiriman artikel setiap ada artikel yang terbit di Creating Website

No comments:

Post a Comment

 

Copyright © 2011. Tamilnadu Results - All Rights Reserved

Proudly powered by Blogger