Home » » இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் பதவிகள்

இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் பதவிகள்

இந்திய ராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டு உள்ளிட்ட பொருட்களைத் தயாரிப்பது மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேயில் உள்ள "ஹை எக்ஸ்ப்புளோசிவ் பேக்டரிகட்கி' நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் செமி-ஸ்கில்டு பிரிவில் உள்ள 27 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிவுகள்: இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் செமி-ஸ்கில்டு பதவிகள் சி.பி.டபிள்யூ., பில்டர் ரெப்ரிஜிரேஷன், ஷீட் மெட்டல் ஒர்க்கர்ஸ், மில்ரைட், வெல்டர், டர்னர், பிட்டர் இன்ஸ்ட்ரூமென்ட், பிட்டர் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பிரிவுகளில் நிரப்பப்பட உள்ளது.
தேவை என்ன: இந்தியன் ஆர்டினன்ஸ் பேக்டரீசின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும், தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். முழுமையான தகுதித் தேவைகளை அறிய இணைய தளத்தைப் பார்க்கவும்.
இதர விபரங்கள்: இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.50/-ஐக் கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை போஸ்டல் ஆர்டர் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் டி.டி., மூலமாக General Manager, High Explosive Factory Khadki, Pune - 411003 என்ற பெயரில் புனே ஜி.பி.ஓ., அல்லது புனேயில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் கட்டணம் மற்றும் தொடர்புடைய சான்றிதழ் நகல்களை இணைத்துப் பின்வரும் முகவரிக்கு 25.02.2012க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
முகவரி:
General Manager,
High Explosive Factory Khadki,
Pune 411003.
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 25.02.2012
இணையதள முகவரி : http://ofb.gov.in
Jika Anda menyukai Artikel di blog ini, Silahkan klik disini untuk berlangganan gratis via email, dengan begitu Anda akan mendapat kiriman artikel setiap ada artikel yang terbit di Creating Website

No comments:

Post a Comment

 

Copyright © 2011. Tamilnadu Results - All Rights Reserved

Proudly powered by Blogger