தமிழ் நாடு அரசின் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்வதற்கு டீச்சர்ஸ் ரெக்ரூட்மென்ட் போர்டு எனப்படும் டி.ஆர்.பி., தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேவைகள் : பிளஸ் 2விற்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் மூலமாக டிப்ளமோ இன் டீச்சர் டிரெய்னிங் (டீ.டி.இ.,) முடித்தவர்களும், டி.ஐ.இ.டி., படிப்பை முடித்து ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை கண் பார்வை இழந்தவர்களுக்கு பாடம் எடுக்க விரும்புபவர்களும் முதல் தாளை எழுதலாம். தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல், வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களில் பட்டப் படிப்பை முடித்துவிட்டு பி.எட்., படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலம் முடித்துவிட்டு ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புபவர்கள் இரண்டாம் தாளை எழுத வேண்டும். இந்த ஆண்டு டீ.டி.இ.டி., அல்லது பி.எட்., படிப்பின் இறுதித் தேர்வை எதிர்கொள்பவர்களும் டி.ஆர்.பி.,தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதர விபரங்கள்: டி.ஆர்.பி., தேர்வு தமிழ் நாட்டின் 66 கல்வி மாவட்ட தலைமையகங்களில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பி., தேர்வுக்கான விண்ணப்பங்களை ரூ.50/- செலுத்தி மாவட்ட கல்வி அலுவலரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். தேர்வுக் கட்டணம் ரூ.500/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை 04.04.2012 வரை பெற முடியும். ஒரே நபரே 2 தாள்களையும் எதிர் கொள்ள விரும்பினாலும் ரூ.500/-மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.
முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களையும், கட்டணம் செலுத்திய சலானையும் இணைத்து ஒரு கவரில் வைத்து எந்த அலுவலகத்திலிருந்து அந்த விண்ணப்பம் பெறப்பட்டதோ அதே அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களைப் பெற பின்வரும் இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பங்களைப் பெற இறுதி நாள் : 04.04.2012
டி.ஆர்.பி., தேர்வு நடைபெறும் நாள் : 03.06.2012

No comments:
Post a Comment