இந்தியாவின் மின்சக்தித் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு 1975ல் நேஷனல் தெர்மல் பவர் கார்பொரேஷன் எனப்படும் என்.டி.பி.சி., நிறுவனம் துவங்கப்பட்டது. தற்போது இந்தியாவின் மிகப் பெரும் மின் உற்பத்தி நிறுவனமாக இது திகழ்கிறது.
உலக அளவில் தரப்படும் பெரிய நிறுவனங்களுக்கான "போர்ப்ஸ் 2009' தர வரிசைப்படி இது 317ஆவது இடத்தைப் பெற்றது. தற்போது 32 ஆயிரத்து 694 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வரும் இந்த நிறுவனம் 2017க்குள் 75 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பாதையில் பயணித்து வருகிறது. இந்த நிறுவனத்தில் எச்.ஆர்., மற்றும் நிதி பிரிவுகளில் எக்ஸிகியூடிவ் டிரெய்னிக்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளி வந்துள்ளது.
பிரிவு வாரியாக காலி இடங்கள்: என்.டி.பி.சி., நிறுவனத்தின் எச்.ஆர்., பிரிவில் 25 காலி இடங்கள் உள்ளன. இவற்றில் ஓ.பி.சி.,க்கு 9ம், எஸ்.சி., பிரிவுக்கு 6ம், எஸ்.டி., பிரிவுக்கு 2ம் இட ஒதுக்கீடு உள்ளது. நிதிப் பிரிவில் 35 காலி இடங்கள் உள்ளன. இவற்றில் ஓ.பி.சி., பிரிவுக்கு 6ம், எஸ்.சி.,பிரிவுக்கு ஒன்றும், எஸ்.டி., பிரிவுக்கு 13ம் இட ஒதுக்கீடு உள்ளது.
தேவைகள்: என்.டி.பி.சி., நிறுவனத்தின் எக்ஸிகியூடிவ் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 21.03.2012 அன்று 29 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எச்.ஆர்., பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் இரண்டு ஆண்டு கால முது நிலைப் பட்டயப் படிப்பு அல்லது எம்.பி.ஏ., படிப்பை எச்.ஆர்., பெர்சானல் மேனேஜ்மென்ட் ஆகிய பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். நிதிப் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் சி.ஏ., அல்லது ஐ.சி.டபிள்யூ.ஏ., படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆன்-லைன் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்காணலை எதிர்கொண்டு வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற வேண்டும். பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் பிணைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.
இதர விபரங்கள்: என்.டி.பி.சி., நிறுவனத்தின் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.500/-ஐக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் எதுவும் இல்லை. கட்டணத்தை ஸ்டேட் வங்கிக் கிளையில் 30987919993 என்ற அக்கவுன்ட் எண்ணில் புது டில்லி - சி.ஏ.ஜி., (கோடு எண் :09996) ல் NTPC என்ற பெயரில் செலுத்த வேண்டும். இதன் பின்னர் ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை செலுத்த வேண்டும். முழுமையான விபரங்களுக்கு என்.டி.பி.சி., நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்க்கவும்.
ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 21.03.212
ஆன்-லைன் தேர்வு நடைபெறும் நாள் : 14.04.2012 மற்றும் 15.04.2012
இணையதள முகவரி: www.ntpccareers.net/et_files/ad_hrfin.pdf

No comments:
Post a Comment