Home » , » Bank of Maharastra Jobs

Bank of Maharastra Jobs

பாங்க் ஆப் மகாராஷ்டிராவின் வேலைவாய்ப்பு

இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளில் முக்கியமான ஒன்றான பாங்க் ஆப் மகாராஷ்டிராவை நாம் அனைவரும் அறிவோம். நவீனமயமான கிளைகள், சிறந்த சேவைகளுக்காக இந்த வங்கி அனைவராலும் அறியப்படுகிறது. இந்த வங்கியில் 457 புரொபேஷனரி அதிகாரிகளைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணி இடங்களுக்கு அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு இட ஒதுக்கீடும் உள்ளது.

தேவைகள்: பாங்க் ஆப் மகாராஷ்டிராவின் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க 01.07.2011 அன்று குறைந்த பட்சம் 20 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். யூ.ஜி.சி., அல்லது ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் கடந்த வருடம் ஐ.பீ.பி.எஸ்., அமைப்பு நடத்திய அதிகாரிகளுக்கான பொது நுழைவுத் தேர்வை எதிர்கொண்டு நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச மதிப்பெண்களையும் பெற்றிருக்க வேண்டும். இந்தத் தேர்வு மதிப்பெண்கள் பிரிவு வாரியாக குறைந்த பட்ச வரையறைகளை கொண்டுள்ளன.

பொதுப் பிரிவைச் சார்ந்த மாணவர்கள் ஒவ்வொரு பிரிவிலும் குறைந்த பட்சம் 24 மதிப்பெண்களையும், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மற்றும் மாற்றுத் திறனாளிகள் பிரிவைச் சார்ந்தவர்கள் குறைந்த பட்சம் 21 மதிப்பெண்களையும் பெற்றிருக்க வேண்டும். முழுமையான விபரங்களுக்கு இந்த வங்கியின் இணையதளத்தைப் பார்க்கவும். இந்த குறைந்த பட்ச தகுதிகளுடன் கம்ப்யூட்டர் அவேர்னஸ் மற்றும் ஆபிஸ் ஆட்டோமேஷனில் படிப்பும் கட்டாயம் தேவை.

இதர விபரங்கள்: பாங்க் ஆப் மகாராஷ்டிராவின் புரொபேஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்களில் தகுதி உடையவர்களுக்கு மட்டும் நேர்காணலுக்கான அழைப்பு அனுப்பப்படும். பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் பிணையப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டியிருக்கும். புரொபேஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவு மற்றும் ஓ.பி.சி., பிரிவைச் சார்ந்தவர்கள் ரூ.200/-ம் எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் ரூ.50/-ம் இந்த வங்கிக் கிளை ஒன்றில் டவுன்லோடு செய்து பெறப்பட்ட சலானின் மூலமாக செலுத்த வேண்டும். முழுமையான விபரங்களை அறிய இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 09.03.2012
இணையதள முகவரி: www.bankofmaharastra.in <http://www.bank ofmaharastra.in>



Jika Anda menyukai Artikel di blog ini, Silahkan klik disini untuk berlangganan gratis via email, dengan begitu Anda akan mendapat kiriman artikel setiap ada artikel yang terbit di Creating Website

No comments:

Post a Comment

 

Copyright © 2011. Tamilnadu Results - All Rights Reserved

Proudly powered by Blogger